நான் பிரமாதமான நடிகன் ஒன்றும் இல்லை: சூர்யா

2 November 2020, 4:16 pm
Quick Share

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. தீபாவளி வெளியீடாக நவம்பர் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.


இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களை ஜூம் செயலி வழியாக நடிகர் சூர்யா சந்தித்துப் பேசினார். அப்போது, நான் ஒரு பிரமாதமான நடிகன் கிடையாது. என்னால் கேமரா முன்னால் உடனே நடிக்க முடியாது.

ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அந்தக் கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனக்கு ஒரு கதையில் என் வாழ்க்கையில் நடந்த எமோஷன் இருந்தது என்றால் தைரியமாக நடிக்கத் தொடங்கிவிடுவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், இயக்குநர் சுதாவை எனக்கு முன்பே நன்றாகத் தெரியும் என்பதால், சில காட்சிகளுக்கு முன்பு நிறையப் பேசி நடித்தேன். அது மிக எளிதாகவே இருந்தது என தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Views: - 16

0

0