“சூர்யாவுடன் நடிக்கவிருக்கும் வெயிட்டான பிரபலம்” – 20 வருடங்களுக்குப் பின் ஒன்று சேரும் கூட்டணி

27 February 2021, 3:57 pm
Quick Share

சமீபத்தில் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வெளியாகி மக்களின் பேராதரவைப் பெற்றது. இந்த படத்தை தியேட்டரில் பார்க்காம மிஸ் பண்ணி விட்டோமே என்று ஏங்கும் அளவு படம் செமையாக இருந்தது. இப்படி மக்களின் வரவேற்பைப் பெற்ற சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் விரைவில் திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாக இருக்கிறார்கள். சூர்யாவின் அடுத்த படமான பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் பிரபலமான நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருபது வருடங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா படத்தில் ராஜ்கிரண், சூர்யா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது அதே கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைய உள்ளது. பெயரிடப்படாத இந்தப் படத்தில் சூர்யாவுடன் ராஜ்கிரண் நடிக்கிறார். மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

1

0