Suriya40: ஒருவழியா கன்ஃபார்ம் செய்யப்பட்ட பிரியங்கா அருள் மோகன்!

29 January 2021, 11:16 am
Quick Share


பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா40 சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்ப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் சூரரைப் போற்று. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. எனினும், விமர்சன ரீதியாக சூரரைப் போற்று நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் நவரசா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இது வெப் சீரிஸாக உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து சூர்யா தனது 40ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். இதற்கு முன்னதாக சூர்யா – பாண்டிராஜ் காம்பினேஷனில் பசங்க 2 படம் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா40 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா அருள் மோகன் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. பாண்டிராஜ், சூர்யா மற்றும் சன்பிக்சர்ஸ்க்கு நன்றி. கடவுளை போற்றினால் எப்போதும் நன்றியுடன் இருப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இமானின் பிறந்தநாளன்று, சூர்யா40 படத்திற்கு இமான் தான் இசையமைக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் பிப்ரவரி மாதத்தில் சூர்யா40 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, முக்கியமான பகுதிகள் முழுவதும் சென்னைக்கு வெளியில் படமாக்கப்பட இருக்கிறது என்று தகவல் தெரிவிக்கின்றது.

Views: - 0

0

0