வைரலாகும் சூர்யாவின் நவரசா போஸ்டர்!

4 March 2021, 11:31 am
Quick Share


முதல் முறையாக சூர்யா நடித்துள்ள ஆந்தாலஜி படம் நவரசா நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா.

இவரது நடிப்பில் கடைசியாக சூரரைப் போற்று படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. என்னதான் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருந்தாலும் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோருக்கான சிறந்த நடிகர், நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் வாய்ப்பு கொடுத்துள்ளது.

அதோடு, சிறந்த படம், இயக்குநர் என்று பல ஆஸ்கர் விருதுகளை இந்தப் படம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பட த்தைத் தொடர்ந்து சூர்யா40 பட த்திலும், வெப் சீரிஸ் நவரசா என்ற பட த்திலும், வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நவரசா என்ற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட 9 கதைகளை மையப்படுத்தி இந்த ஆந்தாலஜி படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், சூர்யாவின் கதையை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

கமலும் காதம்பரியும் என்ற அரை மணிநேரம் வரும் பாகத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். தற்போது சூர்யாவின் நவரசா போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, சித்தார்த், அசோக் செல்வன், நித்யா மேனன், அம்மு அபிராமி, பூர்ணா, விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அழகம் பெருமாள், ரித்விகா, ரோபோ சங்கர், கௌதம் கார்த்திக் என்று ஏராளமான பிரபலங்கள் இந்த கதைகளில் நடித்துள்ளனர்.


இந்த 9 கதைகளை அரவிந்த் சாமி, கௌதம் மேனன், பிஜோய் நம்பியார், ஷமீம், கே வி ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம், ரதீந்திரன் ஆர் பிரசாத் ஆகிய 9 இயக்குநர்கள் இந்த 9 கதைகள் கொண்ட எபிசோடுகளை இயக்கியுள்ளனர். விரைவில், இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிட த்தக்கது.

Views: - 15

5

0