விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள “பீனிக்ஸ்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ரணகளமான ஆக்சன் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் மத்தியில் இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. எனினும் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் மிரளவைப்பதாக பாராட்டி வருகின்றனர்.
சூர்யா சேதுபதி விஜய் சேதுபதி நடித்த பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த சமயத்தில் எல்லாம் அவர் உடல் எடை அதிகமாக காணபட்டார். ஆனால் தற்போது தனது உடல் எடையை குறைத்து மெருகேத்தியும் உள்ளார். இந்த உருமாற்றம் குறித்த அனுபவங்களை தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் சூர்யா சேதுபதி.
“இரான் நாட்டில் இருந்து ஒரு MMA சண்டை வீரரை எனக்கு பயிற்சியளிக்க நியமித்திருந்தார்கள். அவர் நம்மை தூக்கி எறிவார். அதன் மூலமாக வரும் வலியை பழகிக்கொள் என கூறுவார். சண்டைக்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் ஏற்றி பயிற்சி கொடுத்தார். அந்த சமயத்தில் நான் 120 கிலோ எடை இருந்தேன். அதனை 62 கிலோவாக குறைத்தவர் அவர்தான். அதுவும் ஒரே வருடத்தில்.
அதிகாலையில் எழுந்து ஓடச்சொல்வார். ஓடி முடித்துவிட்டு அவருக்கு நான் ஓடிமுடித்துவிட்டேன் என்பதை கூறும் விதமாக புகைப்படம் அனுப்ப வேண்டும். அதன் பின் உடற்பயிற்சி செய்வேன். அதனை தொடர்ந்து 3 அல்லது 4 மணி நேரம் பயிற்சி இருக்கும். முதல் ஒரு மணிநேரம் எப்படி ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும் என பேசுவார்.
இரவு 10 மணிக்கெல்லாம் தூங்க சொல்லிவிடுவார். காலையில் 5.30 மணிக்கு எழுந்துவிடவேண்டும். எழுந்து ஓடிமுடித்துவிட்டு Diet எடுத்துவிட்டு அதன் பின் ஜிம்முக்கு போகவேண்டும். அதன் பின் மதிய உணவு அருந்திவிட்டு அந்த பயிற்சியாளரிடம் செல்ல வேண்டும். 4 மணி போல் அங்கே இருக்க வேண்டும். அதன் பின் 9 மணி வரை பயிற்சி கொடுப்பார். அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்துவிடுவேன். இதுதான் கடந்த ஒரு வருடமாக என்னுடைய வழக்கமாக இருந்தது” என அப்பேட்டியில் சூர்யா சேதுபதி பகிர்ந்துகொண்டுள்ளார்.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.