தமிழ் சினிமாவில் ரைமிங் வசனம் என்ற பெயரை கேட்டாலே டி ராஜேந்தர்தான் நினைவில் வருவார். அவரது திரைப்படங்களில் ஒவ்வொரு வசனமும் பட்டாசாக இருக்கும். அவரது வசனங்களுக்கு என்றே அவரது படத்தை பார்த்தவர்கள் பல கோடி. இப்போதும் கூட டி ராஜேந்தரின் வசனங்கள் பலவும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக வலம் வருகின்றன. அந்தளவிற்கு காலத்தை தாண்டியும் அவர் பாராட்டப்பட்டு வருகிறார்.
டி ராஜேந்தர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “ஒரு தலை ராகம்”. அத்திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தாலும் இயக்குனரின் தலைப்பில் அவரது பெயர் இடம்பெறவில்லை. மாறாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான இ எம் இப்ரஹிம் என்பவரின் பெயரே இயக்குனரின் தலைப்பிலும் இடம்பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய டி ராஜேந்தர் தனக்கு விருது கொடுக்கப்படாதது குறித்து மன வேதனையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நான் இப்போதெல்லாம் எங்கேயும் போவதில்லை, பேசுவதுமில்லை. குறிப்பாக வேறு யாருக்காவது விருது கொடுப்பதற்கு பேச வேண்டும் என்றால் கூட நான் பேசிவிடுவேன். ஆனால் எனக்கு இந்த விருது என்றாலே கொஞ்சம் தயக்கம். நான் விருதை எல்லாம் விரும்புவதில்லை. பாராட்டு விழாவை தேடுவது இல்லை. பொன்னாடையை விரும்புவதுமில்லை. பூமாலையையும் விரும்புவதில்லை, பாமாலையையும் விரும்புவதில்லை.
ஏனென்றால், என்னுடைய முதல் படமான ஒரு தலை ராகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கிடைத்தது விருது. டேபிளில் இருந்த ஒரு டீ கிளாஸில் வந்து அமர்ந்த ஈக்கு கூட கிடைத்தது விருது. ஆனால் இந்த டி ராஜேந்தருக்கு அன்று கிடைக்கவில்லை விருது. ஆனால் எனக்கு ஷீல்டு கொடுக்கவில்லை என்றாலும் இந்த ஃபீல்டை கொடுத்த ஆண்டவனுக்கு எனது நன்றி” என மனம் திறந்து பேசியுள்ளார். இவர் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
This website uses cookies.