தனுஷ்-யை திருப்பி செய்ய தயாராகிறதா செய்த வினைகள்..!

Author: Rajesh
8 February 2022, 6:38 pm
Quick Share

துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்த போது, ‘நீ எல்லாம் கதாநாயகனா’ என்ற பலரின் விமர்சனங்களையும், வென்று இன்று உலகளவில் முன்னணி இயக்குனரின் திரைப்படத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இந்த அளவிற்கு உயர்ந்துள்ளதற்கு, அவரின் விடாத முயற்சியே காரணம் என சினிமா துறையினர் பலரும் தெரிவித்து வருகின்றனர். புகழின் உச்சியில் இருந்தாலும் பெரும்பாலான சர்ச்சைகள் அவரை பின்தொடர்ந்தே வருகின்றன. நடிகைகள் யாராவது விவாகரத்து செய்திகள் வெளியாகும் போதும், பின்னணியில் தனுஷ் பெயர் அடிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Dhanush NEw Heroine - Updatenews360

அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகை திரிஷாவுக்கும் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு திருமண வரை சென்றது. இதனையடுத்து திருமணத்தை நடிகை திரிஷா நிறுத்தியது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னால், நடிகர் தனுஷ் ஏற்பாடு செய்யும் பார்ட்டிகள் அனைத்திலும் நடிகை திரிஷா கலந்து கொள்வார் என்றும் அந்நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ்டன் திரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியதும் தான் திரிஷா திருமணத்தை நிறுத்தினார் எனக் கூறப்பட்டது.

மைனா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் தான் நடிகை அமலா பால், அவர் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அந்த சமயத்தில், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த போது தனுஷ்சுடன் நெருக்கம் காட்டியதை, இருவரின் பிரிவுக்கு காரணம் என தகவல் வெளியானது.

இதனிடையே சமீபத்தில், நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த சில வருடங்களிலேயே இருவரும் பிரிவதாக அறிவித்தனர். தனுஷுடன் இணைந்து தங்க மகன் படத்தில் நடித்த போது இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும் தகவல் வெளியானது.

சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிக பிரபலமாக இருப்பவர் தான் டிடி. ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரும் தன் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கும் நடிகர் தனுசுக்கும் சம்பந்தம் உள்ளதாக அப்போது செய்திகள் பரவியது. அதற்கு ஆதாரமாக டிடி தனுஷுடன் நெருக்கமாக இருந்த பல புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

Views: - 969

4

1