தமிழ் சினிமாவில் நடிகர்கள் பலர் தங்களது திறமையை மக்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக விசித்திரமான கதாபத்திரங்களை ஏற்று நடித்து மிரள வைத்துள்ளார். அதனால் மார்க்கெட் போய்விடுமோ என்ற அச்சம் இருந்தாலும் ஒரு கை பார்த்திடலாம் என துணிந்து இறங்கி திருநங்கையாகவும், பெண் வேடத்திலும் நடித்து பிரம்மிக்க வைத்தவர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கமல்ஹாசன்:
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் ஐயர் மாமியாக லேடி கெட்டப் போட்டு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை பிரம்மிக்க செய்தார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தின் ரீமேக். இந்த படத்தில் கமல் ஐயர் பெண் வேடத்தில் நடித்திருந்தார். இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
விக்ரம்:
2016ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் இருமுகன் இத்திரைப்படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். நயன்தாரா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இதில் விக்ரமின் திருநங்கை வேடம் தான் வில்லன் ரோல். அதில் ஸ்டைலிஷ் திருநங்கையாக நடித்து மிரட்டினார்.
சரத்குமார்:
2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படத்தில் சரத்குமார் காஞ்சனா பேயாக திருநங்கை வேடத்தில் நடித்து கொலை நடுங்க வைத்தார்.
பிரகாஷ் ராஜ்:
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான பிரகாஷ் ராஜ் 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அப்பு’ திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரம் ஏற்று முரட்டு வில்லியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுக்களை பெற்றார்.
ஜெயம் ரவி:
ஹேண்ட்ஸம் ஹீரோவான ஜெயம் ரவி உச்ச நடிகராக இருக்கும்போதே ஆதிபகவன் படத்தில் திருநங்கை கதாபத்திரத்தில் நடித்து ரிஸ்க் எடுத்தார். அதில் வில்லனாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால், அந்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை.
விஜய் சேதுபதி:
மிகச்சிறந்த நடிகரான விஜய் சேதுபதி எந்த ரோல் கொடுத்தாலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவார். அப்படித்தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் எமோஷனலாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
லாரன்ஸ்
டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் காஞ்சனா திரைப்படத்தில் சரத்குமார் பேய் தன்னுள் இறங்கியதும் திருநங்கை ஆவியாக நடித்து அனைவரையும் மிரட்டினார். அவரது நடை, உடை, எக்ஸ்பிரஷன்ஸ் என அவ்வளவு நளினதோடு நடித்ததை பலரும் பாராட்டினார்கள்.
விஷால்
இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்த விஷால் திருநங்கையாக நடித்தார். அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படத்தில் கிட்டத்தட்ட படம் முழுக்க லேடி கெட்டப்பில் வந்து கீர்த்தி சுரேஷை அப்ரோச் செய்தது திரையில் கைதட்டல் வாங்கியது. இப்படத்தில் பெண் வேடத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் வந்து குழந்தைகளை கவர்ந்தார். இதில் சரத்குமார் காஞ்சனாவாக நடித்து மிரளவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.