மூன்று நிமிடத்திற்கு கோடி ரூபாயா..? கோடியில் கல்லா கட்டும் பிரபல நடிகை …

Author: Mari
7 January 2022, 1:41 pm
Quick Share

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா..
இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இவர்கள் இருவரும், சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஏ மாய சேஸாவே’ என்ற படத்தில் நடித்தனர்.


இவர்களது திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு நடிப்பில் கவர்ச்சி காட்ட கூடாது என நாக சைதன்யாவின் குடும்பத்தினர் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஏற்பட்ட மனக்கசப்பே 4 வருடத்திலேயே விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

அதன் பிறகு, சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி வரும் சமந்தா, அண்மையில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் அவர் ஆடிய ஐட்டம் பாடலால் தான் சூப்பர் ஹிட் அடித்தது.


இந்நிலையில், பேக் ஒன்றை விளம்பரப்படுத்தும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் நடிக்கிறதை விட விளம்பர படங்களில் நடிப்பதால் கோடிகளில் சம்பளம் கிடைப்பதாகவும், கூறப்படுகிறது.

Views: - 481

0

0