அந்த 14 பேரு இவங்க தானா? கசிந்தது பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் விபரம் !

3 September 2020, 5:49 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியை சிம்பு, பார்த்திபன், அரவிந்த்சாமி தொகுத்து வழங்குவார்கள் என யூகிக்க பட்ட நிலையில், வழக்கம்போல் இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது தவிர தற்போது இணையதளத்தில் உலவும் தகவல்கள் என்ன என்றால், இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற போகிறவர்கள் யார் என்றால், ஷிவானி நாராயணன், பூனம் பஜ்வா, கிரண், சிவாங்கி, சூர்யாதேவி, சனம் ஷெட்டி,புகழ், ரம்யா பாண்டியன், அதுல்யா, மணிமேகலை, அனுமோகன், அம்ரிதா ஐயர் என பல பேர் கலந்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் எந்த அளவு உண்மை என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 10

0

0