“இந்த வெற்றி என்னோடது இல்ல” – Big Boss நிகழ்ச்சிக்கு பின் ஆரி வெளியிட்ட நெகிழ்ச்சி Video !

18 January 2021, 6:23 pm
aari Arjuna - Updatenews360
Quick Share

Big Boss நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே நம்ம ஆரிதான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட மக்களின் தீர்ப்பானது.

நாட்கள் போக போக அவருக்கு இருக்கும் மாஸ் பாலாஜி மற்றும் ரம்யா பாண்டியனால் அதிகரித்தது. எல்லா வாரம் இறுதியிலும் முதல் நபராக அவர் காப்பாற்றப்படுபவர் ஆரி தான். இதனால் போட்டியாளர்கள் இவர் மீது பொறாமை கொண்டு மேலும் இவரை சீண்டி ஹீரோவாக்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று சீசன் 4-க்கான வின்னர் ஆரி என அறிவித்துவிட்டார்கள், அடுத்த ரன்னர் ஆன பாலாவை விட சுமார் 10 கோடிக்கு மேல் வாக்குகள் அதிகம் பெற்று உள்ளதாக கமல் கூறினார். தற்போது வெற்றி பெற்ற ஆரி, ” இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல, ஓட் போட்ட மக்களின் வெற்றி, எல்லா புகழும் உங்களுக்கே…” என ஆரி நெகிழ்ச்சியாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இந்த விடியோவில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளார்கள்.

Views: - 6

0

0