செல்வராகவன் இயக்கும் ” நானே வருவேன் ” படத்தில் முன்னணி காமெடி நடிகர் !!

Author: kavin kumar
20 October 2021, 4:31 pm
NaaneVaruven_Selvaraghavan
Quick Share

 தமிழ் சினிமாவில் வேறுபட்ட கதைகளையும் ,மாறுபட்ட படங்களையும் கொடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.இவர் இயக்கிய படங்களில் சில படங்கள் தற்போதுவரை ரசிகர்களிடையே தரமான படங்களாக பேசப்பட்டுவருகின்றது . இயக்குனர் செல்வராகவன் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை” திரைப்படம்  இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது . இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிக்கவும் தொடங்கிவிட்டார்,  அடுத்து சில தமிழ் படங்களில்  பிஸியாக நடித்து கொண்டுள்ள இயக்குனர் செல்வராகவன் .  

செல்வராகவன் தமிழில் அடுத்து இயக்கும்  படம் ” நானே வருவேன் ” இந்த படத்தில் முன்னணி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார் . இந்த படத்தின் பஸ்ட்லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியானது . பல ஆடுகளுக்கு பிறகு அண்ணனுடன் கைகோர்க்கும் தனுஷ் படம் “நானே வருவேன்”  இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ‘இந்துஜா’  நடிக்க உள்ளார் . மேலும் “நானே வருவேன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் ‘யோகி பாபு’ ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது .

 நடிகர் யோகி பாபு தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர் . யோகிபாபுவின் காமெடிக்கு தனி ரசிகர்ப்பாட்டலாமே உள்ளது . சமீபத்தில்  சிவகார்த்திகேயன் நடித்து இலியானா படம் டாக்டர் , இந்த படத்தில் யோகிபாபுவின் காமெடி காட்சிகள் காமெடியில் உச்சகட்டமாக  இருந்தது . டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிஸி ஆகா நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபு தற்போது முதன்முறையாக இயக்குனர் செல்வராகவனுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இயக்குனர் செல்வராகவன்  இயக்கத்தில் யோகிபாபு நடிப்பது  இதுவே முதல் முறை . படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Views: - 304

0

1