காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி தமிழ் உள்பட மொத்தம் 10 படங்கள் திரைக்கு வர உள்ளது. இதில் ஹாலிவுட் படம் ஒன்றில் ரிலீஸ் ஆகிறது.
சென்னை: உலக காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி மொத்தம் 10 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா, 2K லவ் ஸ்டோரி, ஃபயர், காதல் என்பது பொதுவுடைமை, அது வாங்கினால் இது இலவசம், தினசரி, படவா, கண் நீரா, 9 ஏஎம் 9 பிஎம், டப்பிங் படமான கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
இருப்பினும், கடைசி நேரத்தில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, இந்த வருடத்தின் முதல் பெரிய பட்ஜெட் படமாக, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்ற நிலையிலும், ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றனர்.
மேலும், பிப்ரவரி 7ஆம் தேதி தெலுங்கு படமான ‘தண்டேல்’ வெளியானது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 26 படங்கள் வெளியாகி உள்ளன. இதில், சுந்தர் சி இயக்கத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மத கஜ ராஜா படம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
மேலும், மணிகண்டனின் குடும்பஸ்தன் படமும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனையடுத்து, பிப்ரவரி இறுதியில் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் ஆகிய படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: தவெகவில் பதவி? தற்குறி ஸ்டேட்டஸ்.. தாடி பாலாஜி விளக்கம்!
அதேநேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ஏப்ரலில் வெளியாக உள்ளது. இது அடுத்த மாஸ் கமர்ஷியல் படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜயின் ஜனநாயகன் தீபாவளி ரேஸிலே களமிறங்க இருக்கிறது.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.