விண்வெளியில் ஒலிக்கவிருக்கும் தமிழனின் இசை..!

Author: Mari
19 January 2022, 1:45 pm
Quick Share

இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்து வருகின்றது. அவரது இசைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாத அளவிற்கு அவரது பாடல்கள் மனதில் ஊடுறுவி விடும். இந்த நிலையில், தற்போது ராஜாவின் பாடல்கள் பூமியைத் தாண்டி விண்வெளியிலும் விரைவில் ஒலிக்க போகும் தகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று, இஸ்ரோ உதவியுடன் உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோள்களில் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், இது நாசாவின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அந்த சாட்டிலைட்டில் இளையராஜா பாடல் ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஒலிபரப்பப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தனது இசையை விண்வெளியில் இசைக்க இளையராஜா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழனின் இசை விண்வெளியில் ஒலிப்பது ஒட்டுமொத்த தமிழனுக்கு பெருமை. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 219

0

0