தமிழகத்தை பொறுத்தவரை சமீப காலமாக டிக்கெட் கட்டணம் மிக அதிகமாகவே நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் டாப் ஹீரோக்கள் நடித்த திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் கட்டணம் ரூ.1000க்கும் குறையாமல் விற்கப்படுகிறது.
சாதாரண நாட்களில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.200க்கும் மேல் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இது போக பார்க்கிங், உணவுப்பண்டங்கள் என ஒரு குடும்பம் திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்றால் ரூ.2000 செலவாகிறது. இதனால் பலரும் ஓடிடியில் படத்தை பார்த்துக்கொள்ளலாம் என திரையரங்கத்திற்கே செல்லாமல் இருந்துவிடுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு கேளிக்கை வரி குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழ்நாடு பிலிம் சேம்பரின் வேண்டுகோளின்படி தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%-ல் இருந்து 4% ஆக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. கேளிக்கை வரி குறைக்கப்படுவதால் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.