மீண்டும் அதிக வயசு வித்தியாசத்தில் Big Boss-இல் முளைத்த தீடீர் காதல் ! ரூட்டு மாறி இப்படி போகுதே

Author: Poorni
15 October 2020, 11:53 am
Quick Share

காதல் விஷயத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து பஞ்சம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் முதல் சீசனில் ஓவியா – ஆரவ். இரண்டாவது சீசனில் மஹத் – யாஷிகா, ஷாரிக் மற்றும் ஐஷ்வர்யா மற்றும் மூன்றாவது சீசனில் கவின் – லாஸ்லியா என பல காதல் கதைகளை மக்கள் பார்த்துவிட்டார்கள்

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் எது என்று பார்த்தால், இப்படி காதல் கிசு கிசு என்று இருப்பவர்கள் நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை தாக்கு பிடிப்பார்கள். இதற்காகவோ என்னவோ வலுக்கட்டாயமாக காதல் விரும்புகிறார்கள்.

தற்போது, இந்த சீசனில் பாலாஜி – ஷிவானி நாராயணன் தான் காதலில் சிக்குவார்கள் என்று பார்த்தால், பாலாஜி, ஷிவானியை செமையா கிண்டலடித்து சிரிக்கிறார். இதேபோல ஷிவானி, பாலாஜியை நாமினேட் செய்வேன் என சபதம் எடுக்கிறார்.

அதே சமயம் பாலாஜி-கேப்ரியலா இடையே ஒரு சின்ன Understanding ஒன்று உருவாகி இருக்கிறது. ஆஜித், பாலாஜி, கேப்ரியலா மூவரும் அமர்ந்து மற்றவர்களை கிண்டலடித்து மகிழ்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆஜித்-கேப்ரியலா தான் இந்த சீஸனின் காதல் ஜோடி என கிளப்பி விட்டு வருகின்றனர்.

Views: - 177

0

0