அப்போ எல்லாமே நடிப்பா?.. கண்ணீர்விட்டு நாடகமாடிய சமந்தா.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. அவ்வப்போது வடமாநில மொழிப் படங்களிலும் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா’ எனும் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக சில படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான யசோதா படப்பிடிப்பின் போது சமந்தாவுக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த வலியோடு இந்த படத்திற்கான டப்பிங்கை சமந்தா பேசிய புகைப்படங்கள் வெளியானதையடுத்து அவரது அர்ப்பணிப்பை எல்லோரும் பாராட்டினர்.

இந்த சூழ்நிலையில், சமந்தா நடித்த ‘சகுந்தலம்’ படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று வருவதோடு, பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, flash இல்லாமல் போட்டோ எடுக்குமாறு புகைப்படக் கலைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை கேட்டகாமல் சமந்தாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர். இதனால் தனது கண்களை கையில் வைத்து மறைத்து சமந்தா சமாளித்துக்கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘மயோசிடிஸ் நோய் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், எலும்புகள் பலவீனமாகி சோர்ந்துவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் சமந்தா பேசியுள்ளார். சில நாட்களில் படுக்கையில் இருந்து கூட எழுந்து செல்வதற்கு சிரமமாக இருந்ததாகவும், நான் வேடிக்கைக்காகவும் ஸ்டைலுக்காகவும் கண்ணாடி அணிவதில்லை எனக் கூறிய அவர், வெளிச்சம் உண்மையில் என் கண்களைப் பாதிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவதுடன், அவருக்கு சிம்பத்தி ஸ்டார் சமந்தா என்றும் பட்டத்தையும் கொடுத்துள்ளனர். அதாவது, இந்த வாரம் முழுவதும் உங்கள் அன்பில் இந்த படத்தை விளம்பரப்படுத்த ஆவலாக இருந்ததாகவும், ஆனால், தொடர்ந்து இருந்த வேலைகளாலும் தற்போது எனக்கு இருக்கும் காய்ச்சல் காரணமாகவும் என்னுடைய குரலும் போய்விட்டதாக குறிப்பிட்டிருந்தார். எனவே சகுந்தலம் குழுவுடன் நீங்கள் அனைவரும் பங்குகொள்ளும் எனக் கூறியிருந்தார்.

சமந்தாவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் கூறினாலும், சிலரோ, ஒவ்வொரு முறை படம் ரிலீஸ் ஆகும் போது, இதுபோன்று தனக்கு பிரச்சனை என்று கூறி சிம்பத்தியை சமந்தா உருவாக்க முயற்சிப்பதாக விமர்சிக்கின்றனர்.

சகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் போது சமந்தா தனக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று கூறி கண்ணீர் விட்டார். ஆனால் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள Citadel திரைப்படத்தின் பிரிமியர் ஷோவை பார்க்க தற்போது சமந்தா லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் மகிழ்ச்சியாக சுற்றி வருகிறார் என்று தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

2 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

3 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

3 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

5 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

5 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

6 hours ago

This website uses cookies.