தல 61…! அஜித்தின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் !

Author: Udhayakumar Raman
25 June 2021, 8:23 pm
Quick Share

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தின் பூஜை மாஸ்டர் படத்தின் பூஜையின்போது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. ஆனால் மாஸ்டர் படம் முடிக்கப்பட்டு வெளியாகி தற்போது விஜயின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உட்பட வெளிவந்துவிட்டது.

ஆனாலும் வலிமை படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வராததால் தல ரசிகர்கள் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட அனைவரையும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வருகின்றனர். ஆனாலும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கறாராக அப்டேட் எதுவும் விடுவதாயில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தல நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பற்றிய ஒரு அப்டேட் வந்திருக்கிறது. ஆனால் இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க ஹெச் வினோத் இயக்கவிருக்கிறார். தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் அப்டேட் வரவில்லை மீண்டும் போனிகபூர் தயாரிப்பாளரா என ரசிகர்கள் சந்தோசப்படுவதா வருத்தப்படுவதா என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர். மேலும் இது இவர்கள் இணையும் மூன்றாவது திரைப்படமாகும்.

Views: - 394

6

1