” 45 வருஷத்துக்கு வாழ்த்துகள் தலைவா..” ரஜினியோடு Phone-ல் 30 நிமிடம் பேசினாரா தல அஜித்?

14 August 2020, 3:13 pm
Quick Share

தல அஜித் உடனான விஸ்வாசத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் அவர் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ராமோஜி பிலிம் சிட்டி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது, அதன் பின் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ரஜினி திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்து 45 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடினார். அது குறித்து அவரின் தீவிர ரசிகரான அஜித் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனது வாழ்த்தினை தெரிவித்ததாகவும்,

மேலும் அண்ணாத்த படத்தை பற்றி நீண்ட நேரம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை கண்ட ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால் தற்போது அந்த தகவல் வெறும் வதந்தியே, அது போல் எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என தகவல்கள் வந்துள்ளது. மேலும், நேர்கொண்ட பார்வை படம் பார்த்த பிறகு அஜித்தை அழைத்து வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0