SPB சரணுக்கு Phone-இல் தனது இரங்கலை தெரிவித்த அஜித் ! பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் !

26 September 2020, 7:52 pm
Quick Share

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றே கூறுவது இல்லை.

இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். அஜித்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக விதை போட்டவர் எஸ்பிபி அவர்கள் என்று எஸ்பிபி அவர்களே ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட அஜித் இன்று எஸ்பிபி அவர்களின் படங்களுக்கு அஜித் வரவில்லையே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர். சற்று முன்னர் வந்த தகவல் என்ன என்றால் தனது நண்பனான சரணிற்க்கு தொலைபேசி மூலம் தனது இரங்கலை தெரிவித்து உள்ளதாகவும் மேற்கொண்டு விரைவில் சரணை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளதாக பிரபல தயாரிப்பாளர் JSK கோபி தெரிவித்துள்ளார்.