வீடியோ : அருள்வாக்கு கொடுக்கும் சாமியிடமே வலிமை பட அப்டேட் கேட்ட தல ரசிகர்கள் – கடுப்பான சாமி

6 July 2021, 7:37 pm
Quick Share

ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரேயொரு ஆக்‌ஷன் காட்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது. பைக் ஸ்டண்ட் காட்சிக்கு படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருக்கின்றனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

வலிமை படத்தைப்பற்றி தலைப்பைத் தவிர எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதனால் பொறுமை இழந்த ரசிகர்கள் அரசியல்வாதிகள் விளையாட்டு வீரர்கள் என கண்ணில் படும் எல்லோரிடமும் வலிமை பட அப்டேட் கேட்டு வருகின்றனர். கோவையில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் தான் ஜெயித்தால் வலிமை மை படத்தின் அப்டேட் வாங்கி தருவதாக வாக்குறுதி தரும் அளவிற்கு ரசிகர்கள் தொல்லை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களை மிஞ்சும் விதமாக ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சாமி ஆடும் ஒருவரிடம் வலிமை படத்தின் அப்டேட் எப்போது வரும் அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று கேட்டுள்ளார். இதனால் அந்த சாமி கடுப்பானது வீடியோவில் தெரிகிறது. மக்களிடமும் தயாரிப்பாளரிடம் அரசியல்வாதிகளிடமும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களிடமும் கேட்டும் பயனில்லை என்று சாமியிடம் கேட்கப் போய் விட்டார் போல.

Views: - 197

1

0