தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கூட இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டது.
லால்சலாம் படத்தை முடித்த பின்னர் ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் கதையை கேட்டு ரஜினி ஓகே சொல்லிவிட படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது.
இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்தினராம் இயக்குனர் டிஜே ஞானவேல். அப்படத்தின் கதை விக்ரமுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். ஆனால், ரஜினிக்கு வில்லனாக நடிப்பதா? அதன் பின் என் கெரியர் என்ன ஆகும்? என சற்று யோசித்த விக்ரமுக்கு உடனே லைக்கா நிறுவனத்திடம் இருந்து போன் வந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே ரூ. 50 கோடி சம்பளம் கொடுப்பதாக கூறியதாம். யோசித்து கூறுகிறேன் என விக்ரம் சொல்லிவிட்டாராம்.
ஒருவேளை இப்படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கவில்லை என்றால் அவருக்கு பதில் நடிகர் அர்ஜுன் நடிக்க வைக்கலாம் என படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அர்ஜுன் தற்போது விஜய்க்கு வில்லனாக லியோ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்து அதிர்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம். ரஜினி – அர்ஜுன் மோதப்போக்கும் காட்சி தியேட்டரில் சும்மா கிழி தான்… !
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.