ஓ.. ”தளபதி 64” கதை இதுதானா ! இதிலும் மறைந்திருக்கும் அஜித் விஜய் போட்டி ! என்ன அது !

14 December 2019, 8:05 pm
Thalapathy64 Updatenews360
Quick Share

பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் தளபதி 64. இந்த படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் டெல்லி, சென்னை, கர்நாடகா என மாறி மாறி நடந்து வருகிறது. அவ்வப்பொழுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களும் வெளியாகி வந்தது.

இதைத்தொடர்ந்து தளபதி 64 படத்தின் கதை தான் என்ன என்பது குறித்து விஜய் ரசிகர்களும் சரி, திரை ரசிகர்களும் சரி, பெரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான சில புகைப்படங்கள் மூலம் ரசிகர்களே ஓரளவு கதை பற்றி கணித்து வந்தனர். தற்போது கதை குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி கதைக்களம் பற்றி கூறிவிட்டது.

இதுவரை வந்த புகைப்படங்கள் விஜய் ஒரு கல்லூரி மாணவர் போன்ற தோற்றத்தை காட்டி வந்தது. ஆனால் விஜய் கல்லூரி பேராசிரியராக தான் அந்த படத்தில் நடித்து வருகிறாராம். இந்த படம் எந்த படத்தை தழுவி எடுத்தது போல் கதை அமைந்துள்ளது என்றால் ரஜினிகாந்த் நடிப்பில் 80களில் வெளிவந்த நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் கதை அம்சத்தை கொண்டுதான் உருவாக்கப்பட்டு வருகிறதாம்.

கதைப்படி கதையின் ஹீரோ விஜய் ஒரு கல்லூரி பேராசிரியராக பணியாற்றும் பொழுது அப்போது நீட் தேர்வில் மாணவி அனிதா இறந்ததை கொண்டு அதே போன்ற சம்பவத்தை கதைக்களத்தில் அமைத்து அதற்காக நீதி கேட்டு போராடும் பேராசிரியராக விஜய் வருகிறார். மேலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

தற்போது கிட்டத்தட்ட அதே போன்ற கதையில் விஜய் நடிப்பது ரஜினியின் படத்தை மறக்கடித்து இந்த கதையில் விஜய் தான் ஹீரோ என்ற அளவுக்கு ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டால் என்பதில் தான் படத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது என்றே சொல்லலாம்.

இதற்கு முன்னர் பலரும் ரஜினி படத்தில் இருந்து சில காட்சிகளை எடுத்தும் நடித்திருக்கின்றனர். ஆனால் அந்த படங்கள் எல்லாம் பழைய படத்தை தான் நினைவில் இருக்க வைத்திருக்கிறது. ஆனால் அஜித் பில்லா படத்தில் நடித்திருக்கும் பொழுது மட்டும் அது பழைய பில்லா படத்தை நினைவில் இல்லாத வகையில் இருந்தது. தற்போது விஜயும் அதே போன்று செய்து விட்டாரேயானால் நிச்சயம் அது விஜய் செய்யும் சாதனை என்றே சொல்லலாம்.

1 thought on “ஓ.. ”தளபதி 64” கதை இதுதானா ! இதிலும் மறைந்திருக்கும் அஜித் விஜய் போட்டி ! என்ன அது !

Comments are closed.