சன் நெட்வொர்க் ஸ்டூடியோவில் தளபதி விஜய்க்கு லுக் டெஸ்ட்!

27 February 2021, 8:43 pm
Quick Share

விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 65 படத்திற்கு லுக் டெஸ்ட் இன்று சன் நெட்வொர்க் ஸ்டூடியோவில் நடந்துள்ளது.

மாஸ்டர் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டை தொடர்ந்து விஜய், தனது 65 ஆவது படமான தளபதி65 படத்தில் நடிக்கிறார். வரும், ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். தளபதி65 பட த்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா, பூவையார்,

குக் வித் கோமாளி புகழ், வித்யுத் ஜம்வால் அல்லது நவாசுதீன் சித்திக், அருண் விஜய் அல்லது சியான் விக்ரம் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அன்பறிவு இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். கேஜிஎஃப் படத்திற்கு இருந்த ஆக்‌ஷன் காட்சிகளை விட இந்தப் படத்திற்கு அதிகளவில் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கு முன்னதாக நண்பன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி65 படம் முழுக்க முழுக்க பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த மாஸ்டர் படமே விஜய்க்கு முதல் பான் இந்தியா படமாக அமைந்துள்ளது. 2ஆவது முறையாக அதுவும் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி உருவாகும் தளபதி65 படம் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. இந்த நிலையில், தளபதி65 படத்திற்கு விஜய்க்கு லுக் டெஸ்ட் இன்று சன் நெட்வொர்க் ஸ்டூடிவியோவில் நடந்துள்ளது. அதற்கு முன்னதாக தயார் செய்யப்பட்ட கிரீன் மேட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Views: - 4

4

3