ஒரு பக்கம் மாஸ்டர் சாதனை, மறுபக்கம் தளபதி65 அப்டேட்: கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

18 January 2021, 11:51 am
Quick Share


மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி65 படம் குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

பிகில் படத்தின் வெற்றிக்கிப் பிறகு விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வந்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளனமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மாஸ்டர் படம் கடந்த 13 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனால், பாக்ஸ் ஆபிஸில் வசூல் கொடுக்குமா? கொடுக்காதா? என்று ரசிகர்கள் பலரும் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், குடும்பம் குடும்பமாக சென்று மாஸ்டர் படத்தை கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் வெளியான 3 நாட்களிலேயே ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.


இந்த நிலையில், தற்போது உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்திற்குப் பிறகு நியூசிலாந்து, சிங்கப்பூர், சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஆஸ்தில்ரேலியா என்று உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் வர்த்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி 3 மில்லியர் டாலர் வசூல் குவித்துள்ளது.

இதன் மூலம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் தளபதியின் மாஸ்டர் படம் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. குறைவான நாட்களில் ஒரு படம் இவ்வளவு வசூல் கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமில்ல. அதோடு, 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்களுக்கு மட்டுமே அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.

அப்படியிருக்கும் போது தளபதியின் மாஸ்டர் இப்படியொரு சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவுக்கு தளபதி விஜய் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய், தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என்பது ஏற்கனவே வந்த அறிவிப்பு தான். இந்த நிலையில், தற்போது தளபதி65 படம் குறித்து முக்கியமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட இருக்கிறது.

இந்த மாத இறுதிக்குள் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்துவிடும்படியும், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை முடித்துவிடும்படியும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை, தளபதி விஜய் கேட்டுக்கொள்ளார். வரும் தீபாவளி 2021 பண்டிகையை முன்னிட்டு தளபதி65 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


ஏற்கனவே தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு இந்த மாதம் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0