தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதில் பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார்.
குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும். செட்டில் கூட மிகவும் அமைதியாக ஒன்றுமே தெரியாதவர் போல் இருப்பார். ஷாட் ரெடி என்றதும் வேறு விஜய்யை பார்க்க முடியும் என அவருடன் நடித்த நடிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் அடுத்ததாக விஜய் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அல்லது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 68 படத்தின் இயக்குனராக வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியிருக்கிறார்.
வெங்கட் பிரபு படம் என்றாலே, காமெடி, Fan moments, மாஸ் சீன்ஸ், பாடல்கள் என அனைத்தும் கலந்த மசாலா திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது வெங்கட் பிரபு படம் என்பதால் இசையமைப்பாளர் நிச்சயம் யுவன் ஷங்கர் ராஜா தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுவன் இசையமைக்க போவதில்லை என்பது போல் தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்களும் சற்று அப்செட்டில் இருக்கிறார்கள்.
விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அல்லது சாய் பல்லவி ஆகியோரில் ஒருவர் தான் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். நயனுக்கு, சம்பளம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர் தயாராக இருப்பதாகவும், ஆனால், நயன்தாராவின் கால்ஷீட் இல்லை என்றும் இதனால் தளபதி 68 படத்தில் அவர் நடிப்பது சந்தேகம் தான் என்றும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.