தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.
இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதால். குறிப்பாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் போன்று தளபதி 68 அரசியல் பேசும் படமாக அமையலாம் என எதிர்பார்க்கலாம்.
மேலும் வெங்கட் பிரபு படம் என்றாலே அதன் பின்னணியில் Game, Sixer, Reunion, Politics, Diet, Holiday, Hangover, Quickie, Hunt போன்ற ஆங்கில வார்த்தைகள் இருக்கும் அந்த வகையில் இந்த படத்திற்கு அவர் என்ன ஆங்கில டைட்டில் வைக்கப்போகிறார் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க போகும் வில்லன் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் எஸ்ஜெ சூர்யாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இவர் ஏற்கனவே விஜய்க்கு வில்லனாக மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார், மேலும் வாரிசு திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் கூட நடித்தார். இவரது மிரட்டலான வில்லத்தனமான நடிப்பையும் , விஜய்யுடன் மோதப்போகும் மாஸான சண்டை காட்சியையும் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.