உதவி இயக்குநரின் பிறந்தநாளை கொண்டாடிய தளபதி விஜய்!

15 January 2021, 1:28 pm
Quick Share

மாஸ்டர் படத்தின் உதவி இயக்குநரின் பிறந்தநாளை மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போதே தளபதி விஜய் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல பிரச்சனைகளைக்குப் பிறகு திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் படம் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

வெறும் 129 நாட்களிலேயே மாஸ்டர் படத்தை எடுத்து முடித்தவர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை 2ஆக பிரித்துக் கொண்டார். பாதி விஜய்க்கு என்றும், பாதி தனக்கு என்றும் பிரித்துக் கொண்டார் போல. ஆமாம், மாஸ்டர் படத்தின் கல்லூரி காட்சிகள் அனைத்துமே விஜய்க்குரியது. ஆனால், மீது சீர்திருத்த பள்ளி, லாரி, வாளி, இருட்டு என்று எல்லாமே லோகேஷ் கனகராஜ்க்குரியது. வெறும் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே திரையரங்குகளுக்கு அனுமதி கொடுத்திருந்தாலும்,

மாஸ்டர் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மாஸ்டர் படம் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், தமிழகத்தில் மட்டும் ரூ.65 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. முதல் நாளில் ரூ.25 கோடி என்றும், 2ம் நாளில் ரூ.40 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாஸ்டர் படம் திரையில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் போது மாஸ்டர் படத்தின் உதவி இயக்குநரின் பிறந்தநாளை கொண்டாடிய தளபதி விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில், நடந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது மாஸ்டர் பட உதவி இயக்குநரின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், மீண்டும் மாஸ்டர் கூட்டணி தளபதி66 படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி66 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Views: - 10

0

0