சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றாலே அதை திருவிழா போல கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் தா. செ ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “வேட்டையன்”.
இந்த திரைப்படம் ஆயுத பூஜையின் ஸ்பெஷல் ஆக திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வில்லனாக பகத் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் ராணா ரகுபதி மற்றும் அமிதாப் பச்சன் , துஷாரா விஜயன் , ரித்திகா சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரிலீசுக்கு முன்னதாகவே சூப்பர் ஹிட் அடித்து விட்டது. வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடிக்க ஆசைப்பட்டு நடித்து அசத்தியிருக்கிறார். இப்படத்தின் முதல் காட்சி தமிழகத்தில் காலை 9 மணி முதல் திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை திரையரங்கில் காண நடிகர் விஜய் மாறுவேடம் போட்டுக்கொண்டு தியேட்டருக்கு வந்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும், விஜய் தன்னுடைய மாஸ்தான இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து வேட்டையன் திரைப்படத்தை ரஜினியின் ரசிகர்களுடன் சேர்ந்து திரையரங்கில் கண்டு களித்து இருக்கிறார் .
இதையும் படியுங்கள்:மங்காத்தாவையே தூக்கி சாப்பிட்ரும் போலயே… “குட் பேட் அக்லி” ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்!
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக மாறுவேடமிட்டு விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை பார்க்க வந்தது பேசுபொருளாகியுள்ளது. தான் நடித்து வெளியாகும் படங்களையே திரையரங்கில் சென்று பார்க்காத நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படத்தை தியேட்டரில் ரஜினியின் ரசிகர்களோடு சேர்ந்து பார்த்திருக்கிறாரே என ரஜினி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
0
0