தளபதி65 பூஜை எப்போதுன்னு தெரிஞ்சிருச்சு? உண்மையான்னு தெரியல?

2 March 2021, 9:12 am
Quick Share


விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்திற்கு வரும் 15 ஆம் தேதி பூஜை போடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்து சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய், தனது 65 ஆவது படமான தளபதி65 படத்தில் நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் பட த்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.


தளபதி65 பட த்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பூவையார், குக் வித் கோமாளி புகழ், வித்யுத் ஜம்வால் அல்லது நவாசுதீன் சித்திக், அருண் விஜய் அல்லது சியான் விக்ரம் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அன்பறிவு இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். நண்பன் படத்தைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தளபதி65 படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.


தளபதி65 படம் முழுக்க முழுக்க பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த மாஸ்டர் படமே விஜய்க்கு முதல் பான் இந்தியா படமாக அமைந்துள்ளது. 2ஆவது முறையாக அதுவும் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி உருவாகும் தளபதி65 படம் பான் இந்தியா படமாக உருவாக இருக்கிறது.

ஆதலால், இந்தப் படமும் வசூல் ரீதியாக ஹிட் கொடுத்து சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், தளபதி65 படத்திற்கு வரும் 15 ஆம் தேதி மிகவும் எளிமையான முறையில் பூஜை போடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் வெளிநாட்டில் அதுவும் ரஷ்யாவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

Views: - 5

0

0