Thalapathy65 Update: விஜய் – சூர்யாவை இணைக்கும் முயற்சியில் சன் பிக்சர்ஸ்!

Author: Udhayakumar Raman
27 March 2021, 7:53 pm
Quick Share

விஜய் மற்றும் சூர்யாவை இணைக்கும் முயற்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மந்தனா ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆம், வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இத்தனை கோடி வசூல் குவிப்பது என்பது சாதாரண காரியமல்ல. அந்த வகையில், மாஸ்டர் படம் இப்படியொரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. மாஸ்டர் படத்திற்கு கிடைத்த ஏக போக வரவேற்பைத் தொடர்ந்து விஜய், தனது 65ஆவது படமான தளபதி65 படத்தில் நடிக்கிறார்.

இந்தப் பட த்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். டாக்டர் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் – அனிருத் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விஜய்க்கு 2ஆவது ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும், பூவையார், புகழ், நவாசுதீன் சித்திக் ஆகியோர் பலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். நண்பன் படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸில் படப்பிடிப்பிற்கான செட் வேலைப்பாடுகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முடிந்த பிறகு தளபதி65 பட த்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தளபதி விஜய் மற்றும் சூர்யாவை இணைக்கும் முயற்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. இருவரையும் ஒரு படத்தில் அதான் தளபதி65 படத்தில் நடிக்க வைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரையும் அழைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நேருக்கு நேர் படத்தில் விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சூர்யா மற்றும் விஜய் இருவரையும் ஒரு பட த்தில் நடிக்க வைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 68

0

0