சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இடையில் உருவாகி வந்த இந்த திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஜி வி பிரகாஷ் இசையமைப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படம் கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகி வெளிவந்திருக்கிறது. இந்த திரைப்படம் இன்று சுதந்திர தின கொண்டாட்டமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த ஆடியன்ஸ் எல்லோருமே கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் தங்கலான் படத்தை பார்க்க வந்த விக்ரமின் ரசிகர்கள் படத்தில் விக்ரம் அணிந்துள்ள வேட்டி, கோமணம் அதே போன்ற உடை கையில் கோளுடன் வந்து கிட்டத்தட்ட விக்கிரமை போல பிரதான கதாபாத்திரத்தில் வந்து திரைப்படத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஏ.எல் திரையரங்கத்தில் நடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தங்கலான் வேடத்தில் வந்த அந்த மொத்த ரசிகர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தங்கலான் படத்தின் பேனருக்கு ஒன்று கூடி நின்று ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிட்டனர். மேலும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
இவர்களை பார்த்த திரையரங்க நிர்வாகத்தினர் தடுத்து மேலாடை இல்லாமல் படத்தை பார்க்க அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் கொஞ்ச நேரம் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் விக்ரம் ரசிகர்கள் மேலாடை அணிந்து வந்து படத்தை பார்த்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.