தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார். அப்படிதான் தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார். பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களை இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, படத்தின் முக்கிய பிரபலங்கள் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, பா ரஞ்சித், ஜிவி பிரகாஷ் மற்றும் ஞானவேல் ராஜா கேரளாவில் பிரமோஷன் பணிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த படத்திற்காக விக்ரமின் ஈடுபாடு குறித்து படத்தில் விக்ரமின் மகனாக நடித்த நடிகர் அர்ஜுன் பேசியுள்ளார். அதில், ஒரு சில காட்சிகளில் அவரின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். ஒருநாள் காலையில், எனக்கு ஒரு பாதம் கொடுத்தார். மேலும், இதுதான் எனது காலை உணவு என்றும் கூறினார். நான் ஏன் என கேட்டேன். உடனே அவர், இந்த கதாபாத்திரத்திற்கான உடல் அமைப்புக்கு இதுதான் சரி தினமும் காலை உணவுக்கு எட்டு பாதாம் மட்டும்தான். அதில், இன்றைக்கு ஒரு பாதாமை உனக்கு கொடுத்துவிட்டேன் என்று தெரிவித்தார். தனது கதாபாத்திரத்திற்காக விக்ரம் சாரின் மெனக்கிடல் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.