தனது கருத்துள்ள நகைச்சுவைகளால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சின்ன கலைவாணர் விவேக். அவர் இறந்துவிட்டாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது போலவே தெரியவில்லை என்றே கூறலாம்.
இப்போது வரை அவரது நகைச்சுவை பல இடங்களில் பேசுவதுண்டு, நியாபகப்படுத்துவதுண்டு. இப்படி ஒரு சூழலில் அவர் உயிரிழந்தது சினிமாவுக்கு பேரிழப்பாக உள்ளது.
இந்த நிலையில் விவேக் மனைவி அளித்த பேட்டியில், விவேக் மரணம் இன்று வரை என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை
இதையும் படியுங்க: சமந்தாவை வற்புறுத்திய நாகர்ஜூனா… 2வது திருமணத்துக்கு தயார்!!
அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உடலுக்கு தேவையானதை பார்த்து செய்வார். கொரோனா சமயத்தில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.
விவேக்கும் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என பலரிடம் ஆலேசானை நடத்தினார். இதனிடையே வெளிநாட்டில் சூட்டிங் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, ஊடகத்தினர் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
ஆனால் மறுநாள் அனைவருக்குமே பேரிடியாக அந்த செய்தி வந்தது. கொரோனா காலக்கட்டத்தில் கூட நடைபயிற்சியை மேற்கொண்டார். வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஒர்க்அவுட் செய்தார். ஆனால் அவர் ஏன் இறந்தார் என்பது இன்று வரை காரணம் எனக்கு தெரியவில்லை.
ஆனால் கொரோனா தடுப்பூசியை நான் குறை சொல்லவில்லை. அவர் எல்லோர் முன்பு, தடுப்பூசியை போட்டுக் கொண்டது அவர் போட்டால் எல்லாரும் போடுவார் என்ற விழிப்புணர்வுதான். தடுப்பூசி போட்டவர்கள் யாரும் இறக்கவில்லை, அதனால் விவேக் இறப்புக்கு தடுப்பூசி காரணம் என கூறமுடியாது என தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.