காஷ்மீர் கடுங்குளிரில் நடுங்கிய படகுழு – “லியோ” ஷூட்டிங் வீடியோ வெளியிட்ட பிரபலம்!

Author: Shree
23 March 2023, 6:34 pm
leo
Quick Share

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், அதற்காக படக்குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்ததகவும் கூறப்படுகிறது. அங்கு இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம், பனி மழை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பிற்காக காஷ்மீர் படபிடிப்பை முடிக்க படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறி அதில் பணியாற்றிய பலரின் அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். மேலும் கூறிய லோகேஷ், மக்களை மகிழ்விக்கும் செயல்பாட்டில், எதுவாக இருந்தாலும் மிகவும் கடினமாக உழைத்த லியோ படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு மகத்தான மரியாதை. #TheCrewBehindLEO என இந்த வீடியோவை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Views: - 137

6

1