ஜனனி ஐயர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் அல்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் நடிகை ஆவதற்கு முன்பு நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார் . இவர் தமிழில் முதல் முதலில்
” திரு திரு துரு துரு ” படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார் . அதன் பின் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய சிம்பு மற்றும் திரிஷா நடித்த ” விண்ணைத்தாண்டி வருவாயா ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் .
தேசிய விருது பெட்ரா இயக்குனர் பாலா இயக்கத்தில் “அவன் இவன்”
படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் ஜனனி ஐயர். அவன் இவன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார் நடிகை ஜனனி.
அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை இதனால் மார்க்கெட் குறைந்துவிட்டது .அப்படி குறைத்த மார்க்கெட்டை திரும்ப கொண்டுவர இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார்.
அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார் நடிகை ஜனனி. இவர் நினைத்தவாறே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவருக்கு வாய்ப்புகள் வரத்துடங்கின.
தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் பஹூரா என்னும் படத்தில் நடித்துள்ளார் ஜனனி.
படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருக்கும் இருக்கும் ஜனனி அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார் .
சமீப காலமாக திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பலரும் வெளிப்படையாக கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில், ஜனனி அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
இதில் பேசிய ஜனனி , ஒரு படத்தில் நடிக்க தான் தேர்வு செய்யப்பட்டபோது, ஒரு ரெண்டு அட்ஜஸ்மெண்ட் இருக்கும், உங்களுக்கு ஓ.கே.வா என்று கேட்டதனால் அதிர்ச்சியடைந்து தனக்கு எந்த வாய்ப்பும் வேண்டாம் என படத்திலிருந்து விலகி விட்டதாகவும், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நாயகன் என அனைவருடனும், அட்ஜஸ்மெண்ட் செய்தால், 15 லட்சம் வரை கொடுப்பதாக தன்னிடம் பேரம் பேசியதாகவும், இதனால் தான் முடியாது என கூறி வெளியேறியதாக தெரிவித்தார்.
இதனிடையே, வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்த போது, 4 நாட்கள் ஷூட்டிங் முடிந்து மேக்கப் அறையில் இருந்த நிலையில், படத்தின் இயக்குநர் தன் மேல் கை வைத்துவிட்டதால், அதிர்ச்சியடைந்து அப்படத்திலிருந்தும் விலகியதாகவும், ஒட்டுமொத்த திரைத்துறையும் அட்ஜஸ்மெண்டில் இயங்குவதாக நடிகை ஜனனி வேதனை தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.