சிவாஜியுடன் அன்றைய காலம் முதலே உடன் சேர்ந்து நடிக்க போட்டா போட்டி ஏற்படும். நடிப்பு சக்கரவர்த்தியுடன் போட்டி போட்டு நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
ஆனால் சிவாஜியுடன் நடிக்க வாய்ப்பு வந்த போது, அதை மறுத்துள்ளார் கேரள மெகா ஸ்டார் மம்முட்டி. கேஎஸ் ரவிக்குமார் இயக்கினாலே படம் வெற்றிதான் என ஒருகாலத்தில் பேசப்பட்டது.
இதையும் படியுங்க: நாயகன் படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க.. இப்ப வரைக்கும் கமல் கூட நடிக்கல : பிரபல நடிகை!
இவர் இயக்கிய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். அப்படி 1998ல் வெளியான படம் தான் நட்புக்காக. உண்மைக்கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் முதலில் விஜயகுமார் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் சிவாஜி கணேசன்.
கதையை கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்ட சிவாஜி, தனக்கு இணையான நடிகரை தேர்வு செய்யும் வரை காத்திருந்தார். ஆனால் படத்தில் கமிட் ஆனவர்கள் கால்ஷீட் பிரச்சனையால் விலகினர்.
இறுதியில் அந்த வாய்ப்பு மம்முட்டிக்கு கிடைத்தது. அவர் என்ன நினைத்தார் என தெரியவில்லை வாய்ப்பை வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் சிவாஜியும், தனக்கு இணையான நடிகர்கள் தேர்வு இல்லை என விலகினார்.
இதையடுத்து, தனக்கு ஆஸ்தான நடிகர்களான சரத்குமார் மற்றும் விஜயகுமாரை தேர்வு செய்தார் கேஎஸ் ரவிக்குமார். கதாநாயகி வாய்ப்பும், மீனா, சௌந்தர்யாவை தேடிப் போக கால்ஷீட் பிரச்சனையால் அவர்களும் விலக, புதுவரவான சிம்ரன் ஜோடி சேர்ந்தார்.
இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சிறந்த படத்துக்கான பிலிம்ஃபேர் விருது மற்றும் தமிழக அரசின் விருதுகளையும் அள்ளியது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் குட் 100 ஆவது படம் கோலிவுட்டில் பல கிளாசிக் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் “சூப்பர் குட் பிலிம்ஸ்”. இதன்…
திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்பு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்…
மாற்றி மாற்றி அறிக்கை ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியினரின் பிரிவிற்கு பின் ஆர்த்தியின் தாயார் பணத்திற்காக ரவி மோகனை பயன்படுத்திக்கொண்டார் என…
வெளியானது டிரைலர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.…
கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை, அப்பா என்று தமிழக முதல்வரை அழைப்பது குறித்து காட்டமாக பேசினார்…
கலவையான விமர்சனம் “டிடி ரிட்டன்ஸ்” என்ற அட்டகாசமான காமெடி ஹாரர் திரைப்படத்தை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக நேற்று வெளிவந்துள்ள திரைப்படம்தான்…
This website uses cookies.