முதல் நாள் முதல் ஷோ பாத்த கர்ணன் டீம்!

9 April 2021, 10:04 am
Quick Share


தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், மாரி செல்வராஜ், கலைப்புலி எஸ் தாணு என்று படக்குழுவினர் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டாஸ். இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் கர்ணன்.


முழுக்க முழுக்க உண்மைக் கதையை மையப்படுத்தி கர்ணன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் நடந்த உண்மைக் கதையை மையப்படுத்தி கர்ணன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, கீழ் சமூகத்தினரைச் சேர்ந்த மக்கள் மேல் சமூகத்தினராலும், அரசாங்க அதிகாரிகளாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களால் பாதிக்கப்படும் நம்ம ஹீரோ, தன் மக்களையும், தன் இனத்தின் உரிமைக்காகவும் போராடும் கதையை மையப்படுத்தி கர்ணன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கர்ணன் கதையில் தனுஷ் குதிரை, வாள், சட்டை, லுங்கி ஆகியவற்றிலேயே வலம் வருகிறார்.


கர்ணன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ராஜிஷா விஜயன் நடித்துள்ளார். இது இவரது முதல் படம் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், லால், யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், கௌரி கிஷான், லட்சுமி ப்ரியா சந்திரமௌலி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இந்தப் பட த்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், வரும் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினம் என்பதால், அதனை முன்னிட்டு இன்று 9 ஆம் தேதி கர்ணன் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.


கர்ணன் படம் திரைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எப்படியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில், மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன், கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் சென்னை ரோகினி திரையரங்கிற்கு சென்று முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 56

2

1