சிவகார்த்திகேயன் சூர்யா பெயரில் நடந்த பண மோசடி ! திடுக்கிடும் தகவல் !

Author: kavin kumar
27 August 2021, 8:47 pm
Quick Share

சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது. தற்போது அந்த தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ மற்றும் பெயரை பயன்படுத்தி மக்களிடம் மோசடி நடை பெற்று உள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 2டி தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் சில ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்துள்ளது. அதில் 2டி தயாரிப்பு நிறுவனம் பெயரில் போலியான இமெயில் ஐடி மற்றும் லோகோவை தயார்செய்து மக்களிடம் பண மோசடி செய்துள்ளனர்.

அதில் தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாகவும் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தில் காலேஜ் ஸ்டூடண்ட் கதாபாத்திரத்தில் நடித்து ஆட்கள் தேவை என்பதால் 3500 ரூபாய் பணம் செலுத்தினால் தாங்கள் நடிக்க வைப்பதாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவ்வாறு பணம் கட்டினால் ஆக்டிங் யூனியன் கார்டு வாங்கி தருவதாகவும் அந்த கும்பல் கூறியுள்ளது.

பணம் கட்டியவுடன் வாழ்த்துக்கள் உங்களுக்கு ஆக்டிங் யூனியன் கார்டு தயாராகிக் கொண்டிருக்கிறது என்று கூறி தாங்கள் சொல்லும் போது சென்னைக்கு வந்தால் போதும் எனவும் கூறியுள்ளனர். எப்போது சூட்டிங் ஆரம்பிக்கும் என்று கேட்டால் சிவகார்த்திகேயன் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருப்பதால் அவரது கால்ஷீட் கிடைத்தவுடன் நீங்கள் அழைக்கப் படுகிறார்கள் என கூறியுள்ளனர். இந்த உரையாடலை கிரீன் ஷாட்டுகள் ஆக தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ள 2டி தயாரிப்பு நிறுவனம் மக்கள் யாரும் இது போன்ற ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 359

0

0