ரஜினி ஸ்டைல்… தெறிக்கவிடும் மியூசிக்… “தி லெஜண்ட்” மோஷன் போஸ்டர் வீடியோ வைரல்..!

Author: Rajesh
4 March 2022, 2:09 pm
Quick Share

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இதனிடையே தற்போது ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘தி லெஜண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஹாரிஸின் இசையில், ஆக்‌ஷன் காட்சியொன்று மோஷன் போஸ்டராக வெளியாகியிருக்கிறது. இப்படத்துக்கான காட்சிகள், அனைத்து பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

Views: - 548

20

7