சரவணா ஸ்டோர் உரிமையாளரான அண்ணாச்சி தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தமன்னா, ஹன்சிகா, பூஜா ஹெக்டே, ஊர்வசி ரவுட்டேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி என பல நடிகைகள் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி அண்ணாச்சி செலவு செய்துள்ளார்.
இப்படத்திற்காக அண்ணாச்சி பல கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு அந்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை.
படத்திற்கு கிடைத்த வரவேற்பை காட்டிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது தான் அதிகம் என்று சொல்லலாம்.
இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் கடையை வெச்சிகிட்டு அதுலயே நல்லா சம்பாதிக்கலாம் என்றும், ஆனா அதுலாம் ஒரு வேலை இல்ல, தான் இனி நடிக்கப்போகிறேன் என நடிக்க வந்துவிட்டதாக தி லெஜண்ட் சரவணன் அருள் மீது கடுமையான விமர்சனங்களை செட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.
இவர் தி லெஜண்ட் என்ற படத்துல நடிச்சாரு, ஆனா பாருங்க படம் வந்த வேகம் தெரியாம போயிடுச்சு என்றும், ஆனா அப்பவும் விடாம இப்போ அடுத்த படம் வேற நடிக்க போறாராம் என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ… நான் எதப்பத்தியும் கவலையே பட மாட்டேன் நான் எனக்கு புடிச்சத பண்ணுவேன் என்று வேறு ஒரு புது லுக்கில், கொஞ்சம் லைட்டா தாடியெல்லாம் வெச்சு அண்ணாச்சி போட்டோ வெளியிட்டு உள்ளார். இதனை பாத்த ரசிகர்கள் அட எப்பா கிறுகிறுனு வருதே.. நீங்க நிறுத்தவே மாட்டீங்களா என்று புலம்பி வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் லெஜெண்ட் சரவணனுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், அவருடைய சொத்து மதிப்பு தற்போது, வெளியாகி உள்ளது இவரது சொத்து 6 ஆயிரம் கோடி என சொல்லப்படுகிறது. அவரின் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஆண்டு வருமானம் மட்டும் சுமார் 2495 கோடி என்று கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.