தளபதி65க்காக லோலோன்னு அலையும் இயக்குநர்: லோகேஷன் தேடுதல் வேட்டையில் படக்குழு!

5 March 2021, 5:59 pm
Quick Share

விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு எங்கு எடுக்கலாம் என்று லோகேஷன் தேடுதல் வேட்டையில் இயக்குநர் மும்முரமாக இறங்கியுள்ளார்.

விஜய் நடிப்பில் திரைக்கு வந்த மாஸ்டர் படம் வெளியாகி 50 நாட்களை கடந்துவிட்டது. உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. மாஸ்டர் படத்தின் மாபெரும் பிளாக் பஸ்டர் ஹிட்டைத் தொடர்ந்து விஜய், தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். டாக்டர் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் – அனிருத் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதற்காக, பூஜா ஹெக்டேவிடம் ரூ.3.5 கோடி வரையில் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதற்கு சம்மதம் தெரிவித்து, தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதே போன்று, குக் வித் கோமாளி புகழ், பூவையார், வித்யுத் ஜம்வால் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். நண்பன் படத்தைத் தொடர்ந்து தளபதி65 படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். வரும் 15 ஆம் தேதி இந்தப் படத்திற்கு மிகவும் எளிமையான முறையில் பூஜை போடப்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, வரும் ஏப்ரல் மாதம் ரஷ்யாவில் தளபதி65 பட த்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக படப்பிடிப்பு நடத்த சரியான லோகேஷனை தேடும் பணியில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இறங்கியுள்ளார். மேலும், ஐரோப்பா மற்றும் ஜார்ஜியா ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளை படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெல்சன் திலீப்குமார் பதிவிட்டுள்ளார்.

Views: - 92

0

0