சூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய மாஸ்டர்!

31 January 2021, 9:33 pm
Quick Share

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளி தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள படம் சூரரைப் போற்று. டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. ஆனால், என்ன திரையரங்கில் வெளியாவதற்குப் பதிலாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இந்தப் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் முதல் நாளில் மட்டும் 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தப் படத்தை மாஸ்டர் படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியானதைத் தொடர்ந்து ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது. சூரரைப் போற்று படத்தை விட மாஸ்டர் படத்தை 66 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன், ரம்யா சுப்பிரமணியன், அர்ஜூன் தாஸ் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி திரைக்கு வந்த மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த முதல் படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0