அட்லி வீட்டில் நிகழ்ந்த துக்கம், அட்லீ வெளியிட்ட உருக்கமான பதிவு !

13 September 2020, 2:03 pm
Quick Share

பிரபல இயக்குனர் அட்லி மனைவி ப்ரியா அட்லியின் தாத்தா மறைந்து விட்டதை உருக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில்,

“நேற்று நானும் எனது மனைவி ப்ரியாவும் வழக்கமான நாளை தொடங்கிய நிலையில் திடீரென உறவினர்களிடமிருந்து பிரியாவின் தாத்தா இறந்து விட்டதாக செய்தி வந்தது. இந்த செய்தி எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. ப்ரியாவின் தாத்தாவுக்கு 82 வயதாக இருந்தாலும் அவர் எனக்கு ஒரு நெருங்கிய இளவயது நண்பர் போல் இருந்தார். என்னிடம் சகஜமாக பழகுவார். ’மின்னலே’ படத்தில் நாகேஷ் நடித்த சுபினி தாத்தா போலவே இருப்பார். அவர் எனக்கு தாத்தா போல் இல்லாமல் நண்பராக இருந்ததால் அவரை, ப்ரோ என்றுதான் அழைப்பேன்.

அவருடைய இழப்பு எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு. எங்கள் குடும்பத்தின் ஒரு தூணாக இருந்து எங்களை வழிநடத்தி வந்த அவருடைய மறைவு ஈடு கட்ட முடியாது” என்று இயக்குனர் அட்லி தனது இரங்கல் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Views: - 5

0

0