1980களில் ரஜினிகாந்த்தின் பல திரைப்படங்களில் சத்யராஜ் வில்லனாக நடித்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு சத்யராஜ் ஹீரோவாக களமிறங்கினார். அதன் பின் அவர் வில்லனாக நடிப்பதை தவிர்த்துவிட்டார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் “சிவாஜி” திரைப்படத்திற்காக இயக்குனர் ஷங்கர் சத்யராஜை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டார். எனினும் 39 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து “கூலி” படத்தில் நடித்தார்.
ரஜினிகாந்திற்கும் சத்யராஜ்ஜுக்கும் இடையே கருத்து ரீதியான வேறுபாடு இருப்பதால்தான் அவர் “சிவாஜி” படத்தில் நடிக்கவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சத்யராஜ், “சிவாஜி” படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
“சிவாஜி படத்தின்போது நான் மார்க்கெட் இழந்த கதாநாயகனாக இருந்தேன். ஹீரோவாக நடித்த படம் ஓடாதா எனவும் மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பிலும் இருந்தேன். நான் ஷங்கரிடம் வில்லனாக நடித்தால் மீண்டும் மார்க்கெட் போய்விடும் என்றேன். உண்மையில் நடந்தது இதுதான்” என கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.