வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான அறிவிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது. இதற்கிடையில் சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் பிசியாகி விட்டார்.
இத்திரைப்படங்களின் வெளியீட்டிற்குப் பிறகாவது “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இத்திரைப்படம் டிராப் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இத்திரைப்படம் டிராப் ஆனதற்கான காரணம் குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது வெற்றிமாறனை அழைத்த சூர்யா, “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு எத்தனை நாட்கள் போகும் என கேட்டாராம். அதற்கு வெற்றிமாறன் “படப்பிடிப்பை முதலில் தொடங்கலாம். அது எப்போது முடிகிறதோ அப்போது முடியட்டும்” என்று மழுப்பலான ஒரு தெளிவில்லாத பதிலை கூறினாராம்.
ஆனால் சூர்யாவோ, “இரண்டு வருடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை உங்களால் முடிக்க முடியுமா?” என்று கேட்டாராம். மேலும் “இத்திரைப்படத்தை ஒரு பாகமாகவே முடித்துவிட வேண்டும், இரண்டு பாகங்கள் எடுக்கக்கூடாது” எனவும் கூறினாராம்.
இவ்வாறு “படப்பிடிப்பை எப்போது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்? என்று தெளிவான ஒரு முடிவை கூறுங்கள், அதன் பின் நான் கால்ஷீட் நாட்களை தருகிறேன்” என சூர்யா கூறினாராம். ஆனால் வெற்றிமாறன் எதற்குமே தெளிவான பதிலை கூறவில்லையாம். இதன் காரணமாகத்தான் “வாடிவாசல்” திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார். இச்செய்தி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.