“வெளியே வரமாட்டேன் போடா” டிரெண்ட் ஆகும் அஜித்தின் Tshirt ! வம்புக்கு இழுக்கும் பிரபல நாளிதழ் !

18 September 2020, 12:14 pm
Quick Share

ஒரு காலத்தில் நடிகர்கள் தன்னுடைய பப்ளிசிட்டிக்காக ஊடகத்தை அணுகுவார்கள். தற்போது ஊடகங்களின் அல்ப பப்ளிசிட்டிக்காக, தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கும் நடிகர்களை வம்புக்கு இழுப்பது, ஊடகத்திற்கு இழுக்கு.

அந்தவகையில் வானுயரம் புகழ் ஈட்டி, இன்று தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் தலையாக இருக்கும் அஜீத் குமாரை அவர்களையும், அவரின் கொள்கைகளையும் சீண்டி விமர்சனம் செய்து வம்புக்கு இழுக்கிறது ஒரு பிரபல மதிப்பிற்குரிய நாளிதழ்.

கடந்த சில வாரங்களாக இந்தி திணிப்பிற்கு எதிராக “இந்தி தெரியாது போடா” என்கிற Tshirt பயங்கரமாக Trending-ஆக இருந்தது. அந்த வகையில் யாரை திட்டினால் அந்த நடிகர்களின் அணியில் இருந்து பதில் வராதோ, அந்த நடிகரை சீண்டிப் பார்க்கும் வகையில் அஜித்தை சீண்டியுள்ளது இந்த பிரபல நாளிதழ். பொதுவாக எந்த பொது நிகழ்சிகளுக்கும், எந்த பொது விழாக்களுக்கும் தலை காட்டதவர் தான் தலை. அதை விமர்சிக்கும் வகையில் ” வெளிய வர மாட்டேன் போட” என்று அஜித் சொல்வது போல, ஒரு Tshirt-ஐ வெளியிட்டு இருக்கிறது இந்த பிரபல நாளிதழ்.

இந்த பதிவு விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், அஜித் ரசிகர்கள் கோபத்தையும் வரவைத்துள்ளது.