கவுதமி வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்த நபர் கைது – முதற்கட்ட விசாரணையில் போலீசார்

17 November 2020, 8:12 pm
Quick Share

நடிகை கவுதமியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் நடிகை கவுதமியின் வீடு உள்ளது. அந்த வீட்டு வளாகத்திற்குள் நேற்றிரவு திடீரென சுவர் ஏறி குதித்து இளைஞர் ஒருவர் புகுந்தார்.

தகவலின்பேரில் நீலாங்கரை போலீசார் வந்து அவரை விரட்டிப் பிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் இளைஞரின் பெயர் பாண்டியன் என்பதும் பெயிண்டராக வேலை பார்ப்பதும் குடிபோதையில் சுவர் ஏறிக் குதித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0