தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் எண்பதுகளில் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது திரைப்படங்களில் நடித்தார். ஆக்ஷன், காதல், குடும்பம், நகைச்சுவை என தனது திரைப்படங்களில் பல அம்சங்களும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். ரஜினியின் திரை வாழ்க்கையில் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாத மைல்கல் திரைப்படம் என்றால் அது பாட்ஷாதான். எத்தனையோ ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும், பட்ஷாவிற்கு என்று தனி மரியாதை உண்டு.
அண்ணாமலை, எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா என சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்குத் தந்தார். இத்தகைய தொடர் வெற்றித் திரைப்படங்களை தந்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் 2002-ம் ஆண்டு பாபா திரைப்படத்தின் வாயிலாக பெரும் சருக்கலை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்படியிருக்கையில்தான் சந்திரமுகி திரைப்படத்தின் மாபெரும் ஹிட். ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து திரையரங்குகளில் சந்திரமுகி வெற்றிகரமாக ஓடியது.
சந்திரமுகிக்குப் பிறகு, சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம்தான் சிவாஜி. இத்திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்திய திரையுலகமே இத்திரைப்படத்தை கொண்டாடியது. ஆனால், அடுத்து எந்திரன் படத்திலும் நடித்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். எந்திரனுக்குப் பிறகு, ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போனது.
பின்னர் சில படுதோல்விகள் என மீண்டும் கபாலி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ஹிட் அடித்தார். ரஜினி அறிமுகம் ஆனதில் இருந்தே தன்னைத்தானே செதுக்கி செதுக்கி இந்த இடத்திற்கு உயர்ந்துள்ளார். அதற்காக தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. கமல் ஹாசனும் மிகவும் திறமைவாய்ந்த நடிகராக இருந்தாலும் அவர் சகல வசதிகள் நிறைந்த திரைபின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவர் ரஜினிக்கு அடுத்தபடியாகவே பார்க்கப்படுகிறார்.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.