ரொம்ப நல்லவ மாதிரி நடித்த சாச்சனா… நீ இதுக்கு தான் வந்தியா? திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

Author:
8 October 2024, 11:30 am
sachana
Quick Share

பிக்பாஸ் சீசன் 8 கடந்த ஞாயிறு கிழமை துவங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. முதல் நாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் உள்ளே போன பிறகு விஜய் சேதுபதி ஒரு பேரதிர்ச்சி கொடுத்தார்.

அதாவது அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் நடைபெற இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு இரண்டாவது ஆளாக சென்ற போட்டியாளரான சாச்சனா ஆண்களுக்கு எந்த பக்கம்? பெண்களுக்கு எந்த பக்கம்? என்ற முடிவெடுக்கும் இடத்தில் சாச்சனாவும் இருந்தார் .

bigg boss 8

நாங்கள் ஒரு பெரிய அறை உங்களுக்கு விட்டுக் கொடுக்கிறோம். ஆனால், அதற்கு பதில் ஒரு வாரம் மட்டும் ஆண்களை பெண்கள் யாரும் நாமினேட் செய்யக்கூடாது என கண்டிஷன் போட்டனர். அதற்கு பெண்களும் ஒப்புக் கொண்டு டீல் போட்டனர்.

ஆனால், அதற்குப் பின் வந்த ஜாக்லின் அந்த கண்டிஷனை ஏற்றுக் கொள்ளவே முடியாது என பிடிவாதமாக இருந்தார். இது அடுத்த சாச்சனா பேசும் போது நான் வெளியே போனாலும் பரவாயில்லை அந்த முடிவு எடுத்த பெண்களின் நான்கு பேரில் நானும் ஒருத்தி ஒரு வேலை பெண்களை மட்டும் நாம் ஏன் எலிமினேட் செய்யும் நிலை வந்தால்… அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு பெண் வெளியே போக வேண்டும் என்றால் அது நான் ஆக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என வெளிப்படையாக கூறினார்.

sachana

அதன் பிறகு 24 மணி நேர எலிமினேஷனுக்கு பலரும் அதை காரணம் காட்டி நாமினேட் செய்தனர். அதிகம் பேர் நாமினேட் செய்யப்பட்ட சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் அவர் வாய் விட்டு தானாகவே வெளியேறி விட்டார். இதை கேள்விப்பட்ட நெட்டிசஸ் பலரும் நீ இப்படி விட்டுக் கொடுக்க தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தியா?

இதையும் படியுங்கள்:Bigg Boss வீட்டில் தஞ்சம் அடைந்த கள்ளக்காதல் ஜோடி… வெளுத்து வாங்கிய முன்னாள் மனைவி!

sachana

விட்டுக் கொடுத்து நல்ல பெயர் எடுப்பதற்கு இங்கே யாரையும் கூப்பிடல. நல்லவர் போல் வேஷம் போட்டு டைட்டில் வெல்ல முடியாது. போட்டியில் இறங்கி விளையாடி வெற்றி பெற்றால் மட்டும் போதும் என நெட்டிசன்ஸ் கருத்துக்களை கூறி வருகிறார். மேலும் சாச்சனா வெளியேறிய விவகாரத்தில் விஜய்சேதுபதியின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

  • virat kohli தம்பி கிட்ட வாப்பா… விராட் கோலியை கை பிடித்து இழுத்து அலப்பறை செய்த Aunty – தீயாய் பரவும் வீடியோ!
  • Views: - 196

    0

    0